×

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது

சென்னை: நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு தொடங்கியது. 2 மணிக்கு தொடங்கியுள்ள நீட் நுழைவுத்தேர்வு இன்று மாலை 5.20 மணிக்கு நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உள்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதுகின்றனர்.

தேர்வை, 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். சென்னையில் 36 மையங்களில் மொத்தம் 24,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வில் பங்கேற்றுள்ளனர். தமிழ் உள்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு; ஜூன் 14ஆம் தேதி முடிவு வெளியாகிறது.

இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 180 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம் பெறும். தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் என்றாலும், மாணவர்கள் மாணவர்கள் காலை 11 மணி முதல் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதும் மாணவர்கள் பல்வேறு பரிசோதனைக்குp பின்னரே தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

The post நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : NEET ,Chennai ,Tamil Nadu ,
× RELATED நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம்...